TNPSC Thervupettagam

உடனடி சரிபார்ப்பு நடவடிக்கை -பேங்க் ஆஃப் இந்தியா

December 21 , 2017 2563 days 874 0
  • அதிகளவிலான வாராக் கடன்களையும் (Non-performing assets-NPA), பற்றாக்குறையான பொது சமபங்கு முதல் அடுக்கு மூலதனத்தையும் (common equity tier 1 capital -CET 1), சொத்துக்கள் மீதான எதிர்மறை வருவாயையும் (Negative Return On Assets-ROA)) கொண்டுள்ளதன் காரணமாக இந்திய ரிசர்வ் வங்கியானது பேங்க் ஆஃப் இந்தியா வங்கியை உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் (Prompt Corrective Action Framework) கீழ் கொண்டுவந்துள்ளது.
  • மார்ச் மாதம் முடிவுற்ற 2017-ஆம் ஆண்டின் நிதி ஆண்டிற்காக நடத்தப்பட்ட   இடர் அடிப்படையிலான கண்காணிப்பு மாதிரியின்  (risk based supervision model)  கீழ்  மேற்கொள்ளப்பட்ட   ஆன்சைட் சோதனைகளின் (onsite inspection) தொடர்ச்சியாக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • பேங்க் ஆஃப் இந்தியா வங்கியானது ரிசர்வ் வங்கியின்   உடனடி சரிபார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின்   கீழ் கொண்டுவரப்பட்டுள்ள ஒன்பதாவது வங்கியாகும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய உடனடி சரிபார்ப்பு நடவடிகைக் கட்டமைப்பின் கீழ், வங்கிகளின் நிகர வாராக்கடன் விகிதம் (Net NPA ratio) 6 சதவிகிதத்தை மீறி அதிகரித்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மீது சரிபார்ப்பு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2016 ஆம் ஆண்டின் மார்ச் மாத காலாண்டில் 6 சதவீதமாக இருந்த   பேங்க் ஆஃப் இந்தியாவின் நிகர வாராக்கடன் விகிதமானது 2017 ஆம் ஆண்டின் மார்ச் முடிவில் 90 சதவீதம் என அதிகரித்துள்ளதால் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் மீது  இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் பழைய உடனடி சரிப்பார்ப்பு நடவடிகைக் கட்டமைப்பின் கீழ் வங்கிகளின் நிகர வாராக்கடன் விகிதம் 10 சதவிகிதத்தை தாண்டினால் மட்டுமே சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
  • இந்திய ரிசர்வ் வங்கியால் பரிந்துரைக்கப்படும் வாராக்கடன் மீட்பிற்கான சரிபார்ப்பு நடவடிக்கைகள் உட்பட பல்வேறு சரிபார்ப்பு நடவக்கைகளை உரிய காலத்தில் உரிய முறையில் மேற்கொண்டு வங்கிகளின் நிதியியல் ஆரோக்கியத்தை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவருவதற்கு வங்கிகளுக்கு உதவிபுரிவதே உடனடி சரிப்பார்ப்பு நடவடிக்கைக் கட்டமைப்பின் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்