TNPSC Thervupettagam

உடன்குடி பனங்கருப்பட்டி – புவிசார் குறியீடு

October 8 , 2023 415 days 807 0
  • உடன்குடி ‘பனங்கருப்பட்டிக்கு’ (பனை வெல்லம்/ குர்) புவிசார் குறியீடு வழங்கப் பட்டு உள்ளது.
  • இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் பனை வெல்லம் தயாரிக்கும் முறையானது, கூடுதல் நவீன உத்திகள் எதுவும் சேர்க்கப்படாமல் இன்று வரையில் பாரம்பரிய முறைப்படி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் தாலுக்காவில் உள்ள உடன்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பனை சாற்றில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டிக்கு சில தனித்துவங்கள் உண்டு.
  • இப்பகுதியில் காணப்படும் சிவப்பு மணல் திட்டு மண் வகையே இதற்குக் காரணம் ஆகும்.
  • பனை வெல்லத் தயாரிப்பில், டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் பாஸ்போரிக் அமிலம் பல பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.
  • ஆனால் உடன்குடி பனங்கருப்பட்டியில் இதுபோன்ற ரசாயனக் கலப்படங்கள் எதுவும் பயன்படுத்தப்படுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்