உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம்
November 26 , 2022 735 days 359 0
140 ஆண்டுகளுக்குப் பிறகு உடலின் மையப் பகுதியில் ஆரஞ்சு நிறம் கொண்ட புறா இனம் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது முதன்முதலாக மற்றும் கடைசியாக 1882 ஆம் ஆண்டில் தென்பட்டது.
2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில், பெர்குசன் தீவின் மிக உயரமான சிகரமான கில்கெரான் மலையின் மேற்கு சரிவுப் பகுதியில் இந்த இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்தனர்.
வரலாற்றில் இந்த இனம் தென்படுவது இது இரண்டாவது முறையாகும்.
இது கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற இறகுகள் மற்றும் சிவப்பு நிறக் கண்கள் கொண்ட ஒரு பெரிய, நிலப்பரப்பு சார்ந்த புறா இனம் ஆகும்.
இந்த இனமானது, பப்புவா நியூ கினியாவில் உள்ள பெர்குசன் தீவில் மட்டுமே காணப் படுகிறது.
26.1 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மற்ற அனைத்து உயிரினங்களிலிருந்தும் பிரிந்த இந்த இனமானது ஓடிடிபாப்ஸ் நோபிலிஸ் என்ற இனத்திலிருந்துப் பிரிந்தது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இந்த இனங்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட வில்லை என்றாலும், இந்த இனம் மிகவும் அச்சுறுத்தல் நிலையில் உள்ள இனமாகப் பட்டியலிடப் பட்டது.
இதன் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை 50 முதல் 249 பறவைகள் ஆகும்.