இந்திய ரிசர்வ் வங்கியானது, ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை வழிமுறைகளை வலுப்படுத்துவதற்காக வேண்டி உத்கர்ஷ் 2.0 எனப்படும் அதன் இடைக்கால உத்திசார் நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தினைத் தொடங்கியுள்ளது.
இது 2023 முதல் 2025 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழிமுறைகளை வழங்கும்.
இந்திய ரிசர்வ் வங்கியின் சட்டப்பூர்வ மற்றும் பிற செயல்பாடுகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஆறு கொள்கைசார் அறிக்கைகள் இதில் அடங்கும்.