உட்செலுத்தக் கூடிய பட்டு-பட்டிழைப் புரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரோ கூழ்மம் (ஹைட்ரோ ஜெல்)
May 20 , 2020 1653 days 675 0
மேம்படுத்தப்பட்ட அறிவியல் ஆராய்ச்சிக்கான ஜவஹர்லால் நேரு மையமானது (JNCASR - Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research) நீரிழிவு நோயாளிகளுக்கு இன்சுலினை உட்செலுத்தக் கூடிய பட்டு-பட்டிழை புரதத்தை அடிப்படையாகக் கொண்ட ஹைட்ரோ ஜெல்லை (silk-fibroin based hydrogel) உருவாக்கியுள்ளது.
இது உயிரி-ஒத்த சேர்க்கைகளை (biocompatible additives) பயன்படுத்தி உருவாக்கப் பட்டுள்ளது.
இது நீண்ட காலத்திற்கு இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கின்றது.
பட்டிழைப் புரதம் என்பது நீரில் கரையாத ஒரு புரதமாகும்.
பட்டிழைப் புரதமானது பட்டுப் புழுவினால் உருவாக்கப் படுகின்றது.
பட்டு தனது மூல நிலையில் செரிசின் மற்றும் பிப்ரியான் ஆகிய 2 புரதங்களைக் கொண்டுள்ளது.