TNPSC Thervupettagam

உட்செலுத்தப்படும் கருத்தடை மருந்துகள் தமிழ்நாட்டில் அறிமுகம்

September 15 , 2017 2628 days 954 0
  • தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை துறை 'அந்தரா'  (Antara) என்ற திட்டத்தின் கீழ்  உட்செலுத்தக் கூடிய கருத்தடை மருந்துகளை அறிமுகப்படுத்தியுள்ளது .
  • குழந்தைகள் பிறப்புக்கு இடையே போதிய இடைவெளி இல்லாததால் உடல் ரீதியாக சிக்கல்கள் ஏற்பட்டு பிரசவத்தின்போது தாய்மார்கள் மற்றும் பச்சிளங்குழந்தைகள் குழந்தைகள் உயிரிழக்கின்றனர்.
  • இதனைத் தடுக்கும் விதத்திலும், மக்கள் தொகைப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கிலும் டி.எம்.பி.ஏ / டிப்போ மெட்ராக்சி ப்ரோஜெஸ்டெரோன் அசிடேட் (Depot Medroxy Progesterone Acetate - DMPA) எனும் ஊசி மூலம் உட்செலுத்தக்கூடிய கருத்தடை மருந்துகள் 'அன்டரா' திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்றன.
  • மாநிலத்தின் அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட பெண்களால் இந்த மருந்தினைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்தக்  கருத்தடை மருந்தின்  விளைவுகள்  மீளக்கூடியவை ஆகும், அதாவது இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்திய மூன்று மாதங்களில் பெண்கள் மீண்டும் கருவுற முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்