இராஜஸ்தானின் கியோலாடியோ தேசியப் பூங்காவில் 'உட்ரிகுலேரியா' (சுண்டெலிக் கூண்டு) என்ற அரிய மற்றும் தனித்துவமான ஊனுண்ணித் தாவரம் கண்டறியப் பட்டு உள்ளது.
இது கடைசியாக இந்தியாவில் சுமார் 36 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு 2021 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தின் மண்டல் பள்ளத்தாக்கில் கண்டறியப் பட்டுள்ளது.
இந்த தாவரம் ஆனது பொதுவாக மேகாலயா மற்றும் டார்ஜிலிங் போன்ற பகுதிகளில் காணப்படுகிறது.
இந்தத் தாவரங்கள் ஆனது புரோட்டோசோவா, பூச்சிகள், லார்வாக்கள், கொசுக்கள் மற்றும் தலைப்பிரட்டைகள் போன்ற உயிரினங்களைச் சிக்க வைத்து உணவாகக் உட்கொள்கின்றன.