ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் ஆதரவுடன் உலக வள நிறுவனம் (WRI - World Resources Institute) “உணவு இழப்பு மற்றும் கழிவுகளைக் குறைத்தல்” என்ற புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இது உலகளவில் உணவு வீணாதலை “அளவீடு” செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் உணவுகளில் மூன்றில் ஒரு பங்கு சாப்பிடப் படாமல் வீணாகின்றது (செலவு: 940 பில்லியன் டாலர்).
8% பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்திற்கு இந்த சாப்பிடப்படாத உணவு ஒரு காரணமாகும்.