உலக உணவு உற்பத்தியானது, வருடாந்திர உலகளாவிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டில் தற்போது 15 சதவீதப் பங்கினைக் கொண்டுள்ளது.
இது 4.6 ஜிகா டன் கார்பன் டை ஆக்சைடு உமிழ்விற்குச் சமமாகும்.
உணவு உற்பத்தி மூலமான உமிழ்வானது, அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ரஷ்யாவின் ஒருங்கிணைந்த உமிழ்வுகளுக்கு இணையான உமிழ்வினை வெளியிடுகிறது.
2050 ஆம் ஆண்டில் உலகளாவிய உணவுத் தேவையானது 35-56 சதவிகிதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்க ப்படுவதோடு, அதற்கேற்ற வகையில் புதைபடிவ எரிபொருள்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.
நிலத்திலிருந்து உணவு உட்கொள்ளல் வரையிலான ஒட்டுமொத்த உணவு விநியோகச் சங்கிலியிலும் உள்ள உலகளாவிய புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.