ஐக்கிய நாடுகள் சபையின் (UN) உணவு அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகிய அமைப்புகள் ஆனது 'Cereal Supply and Demand Brief' மற்றும் 'Crop Prospects and Food Situation' ஆகிய இரண்டு முக்கிய அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.
கோதுமை உற்பத்தியானது, 2025 ஆம் ஆண்டில் 796 மில்லியன் டன்களை (Mt) எட்டக் கூடும் என்ற நிலையில் இது முந்தைய ஆண்டை விட 1% அதிகரிப்பைக் குறிக்கிறது.
FAO ஆனது உலகத் தானிய இருப்பு 1.9% குறைந்து, 2025 ஆம் ஆண்டில் மொத்தம் 869.3 Mt ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது.
2024 ஆம் ஆண்டில் உலகளாவியத் தானிய உற்பத்திக்கான அதன் கணிப்பை 2,842 Mt ஆக திருத்தியமைத்தது என்ற நிலையில் இது 2023 ஆம் ஆண்டு கணிப்பை விட சற்று அதிகமாகும்.
உலகளவில் அரிசி உற்பத்தியானது, 2024-25 ஆம் ஆண்டில் 543 Mt என்ற புதிய சாதனை அளவினை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மொத்த தானிய நுகர்வு ஆனது 2024 – 25 ஆம் ஆண்டில் 2,867 மெட்ரிக் டன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.