2024 ஆம் ஆண்டின் உணவு நெருக்கடி குறித்த உலகளாவிய அறிக்கையினை (GRFC) உணவுப் பாதுகாப்பு தகவல் வலையமைப்பினால் தயாரிக்கப்பட்டு, உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பினால் வெளியிடப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் 59 நாடுகளில் சுமார் 282 மில்லியன் மக்கள் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
ஒட்டு மொத்தமாக, மதிப்பிடப்பட்ட 5 பேரில் ஒருவர் தீவிர அவசர நடவடிக்கை மேற் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருந்தனர்.
2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தரவுகளின் அடிப்படையில், 12 நாடுகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மை நிலை மோசமடைந்து உள்ளது.
இந்த நாடுகளில், பெரும்பாலும் சூடானில் உள்ள 13.5 மில்லியன் மக்களுக்கு அவசர உதவியின் தேவையுள்ளது.
இதற்கிடையில், 2022 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான தரவுகளின் அடிபிப்படையில் 17 நாடுகளில் உணவுப் பாதுகாப்பு நிலை மேம்பட்டுள்ளது.