2022 ஆம் ஆண்டில், 58 பிராந்தியங்களில் உள்ள சுமார் 258 மில்லியன் மக்கள் உணவு நெருக்கடி அல்லது மோசமான உணவுப் பாதுகாப்பின்மை நிலையான 3 ஆம் நிலை அல்லது அதற்கு மேற்பட்ட நிலை அல்லது அதற்கு சமமான நிலையில் இருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது.
41 நாடுகள் / பிரதேசங்களில் உள்ள 253 மில்லியன் மக்கள் நெருக்கடி நிலையில் இருந்தனர்.
19 நாடுகளில், உணவு நெருக்கடிக்கான ஒரு மிகப்பெரியப் பங்களிப்புக் காரணியாக மோதல் / பாதுகாப்பின்மை ஆகியவை இருந்தன.
இதற்கிடையில், 12 நாடுகளில் நிலவும் கடுமையான உணவுப் பாதுகாப்பின்மைக்கு வானிலை / மோசமான பருவநிலை ஆகியவை முதன்மைக் காரணமாக உள்ளன.
பாகிஸ்தான் நாடானது, அதன் பகுப்பாய்வு செய்யப்பட்ட மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப் பாட்டின் 3வது நிலை அல்லது அதற்கு மேற்பட்ட நிலையில் இருந்த காலகட்டமான 2017 ஆம் ஆண்டு முதல் ஒரு ‘பெரிய’ உணவு நெருக்கடி கொண்ட நாடாக வரையறுக்கப் பட்டுள்ளது.
5 வயதிற்குட்பட்ட 35 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் நலிவுநிலையினால் பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அவர்களில் 9.2 மில்லியன் பேர் கடுமையான ஒரு நலிவு நிலையினால் துன்புறுகின்றனர்.