TNPSC Thervupettagam

உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம்

May 27 , 2024 53 days 159 0
  • சமூக ஊட்டச்சத்து திட்டங்களின் செயல்பாட்டிற்கான தொழில்நுட்ப மற்றும் தளவாட ஆதரவை வழங்குவதற்குப் பொறுப்பு கொண்டுள்ள இந்த வாரியமானது, அரசாங்க அமைப்புகளை திறன்மிக்கதாக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக "அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது".
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் ஆனது மத்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தினால் மூடப்பட்டது.
  • இது டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட அமைச்சகத்தின் தொழில்நுட்பப் பிரிவாகும்.
  • நான்கு பிராந்திய அலுவலகங்கள் மற்றும் ஃபரிதாபாத், மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னையில் உள்ள பல தரக்கட்டுப்பாட்டு ஆய்வகங்கள் உட்பட பலவிதமான அலுவலக வலையமைப்புகளை இந்த வாரியம் கொண்டிருந்தது.
  • உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் ஆனது, முதலில் வேளாண் அமைச்சகத்தின் கீழ் நிறுவப் பட்டது ஆனால் பின்னர் 1993 ஆம் ஆண்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்திற்கு அது மாற்றப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்