TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மை நிலை அறிக்கை 2022

November 18 , 2022 608 days 357 0
  • உணவு மற்றும் வேளாண்மை நிலை (SOFA) என்பது ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) வெளியிடுகின்ற ஒரு வருடாந்திர முதன்மை அறிக்கைகளில் ஒன்றாகும்.
  • அறிவியல் அடிப்படையிலான மதிப்பீட்டின் அடிப்படையில் உணவு மற்றும் வேளாண் துறை தொடர்பான பல்வேறு சிக்கல்கள் பற்றிய விரிவான நுண்ணறிவுகளை இது வழங்குகிறது.
  • இது கிராமப்புறம் மற்றும் வேளாண் மேம்பாடு மற்றும் உலகளாவிய உணவுப் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் வழங்குகின்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கி உள்ளது.
  • உலகம் முழுவதிலும் இருந்து பெறப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களைப் பிரதிநிதித் துவப்படுத்தும் 27 கள ஆய்வறிக்கைகளை இந்த அறிக்கை ஆய்வு செய்தது.
  • இதில் 27 சேவை வழங்குநர்களில் 10 நிறுவனங்கள் மட்டுமே இலாபகரமாகவும், நிதி ரீதியாகவும் நிலையானவையாக உள்ளன.
  • பல்வேறு நாடுகளுக்கு இடையேயும், நாடுகளுக்குள்ளேயும் எந்திரமயமாக்கல் ரீதியிலான தொழில் நுட்பங்கள் பரவுவதில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.
  • இந்த நுட்பத்தின் ஏற்பானது, குறிப்பாக ஆப்பிரிக்காவின் துணை சஹாரா பகுதிகளில் குறைவாக உள்ளது.
  • இந்தப் பகுதியில் மேற்கொள்ளப்படும் வேளாண்மையானது மனித மற்றும் விலங்கு சக்தியினைக் கொண்டு இயக்கப்படுவதால் அதன் உற்பத்தித்திறனானது கணிசமான அளவில் குறைவாக உள்ளது.
  • இந்தச் சிக்கலைத் தீர்ப்பதற்காக என்று நிலையான வாடகை வாகன வழிமுறைகளை நிறுவுமாறு இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்