உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச மன்றத்தின் (Global Forum for Food & Agriculture - GFFA) 10வது கூடுகை ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்றது.
இந்த ஆண்டிற்கான கருத்துரு : “நிலைத் தன்மையுடனும் பொறுப்புடனும் திறமிக்கதாகவும் கால்நடைகளின் எதிர்காலத்தினை வடிவமைத்தல்“
GFFA பற்றி
உணவு மற்றும் வேளாண்மைக்கான சர்வதேச மன்றம் ஆனது ஒரு சர்வதேச அளவிலான மாநாடு ஆகும். இது சர்வதேச வேளாண்-உணவு தொழிலகங்களின் எதிர்காலத்தைப் பற்றிய அக்கறைகளை நோக்கமாகக் கொண்டதாகும்.
உலகம் முழுவதிலுமிருந்து இதில் பங்கேற்கும் அரசியல், வணிகம், அறிவியல் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமீபத்திய வேளாண் கொள்கைகளை நன்கு புரிந்து கொள்ளவும் அவர்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த மன்றம் நல்வாய்ப்பினை வழங்குகிறது.