TNPSC Thervupettagam

உணவு மற்றும் வேளாண்மையின் எதிர்காலம் - மாற்றத்திற்கான இயக்கிகள் மற்றும் தூண்டுகோல்கள்

January 6 , 2023 559 days 283 0
  • இந்த அறிக்கையினை உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிக்கை வேளாண் உணவு முறைகளின் தற்போதைய மற்றும் அதிகரித்து வரும் இயக்கிகள் மற்றும் அவற்றின் சாத்தியமான எதிர்காலப் போக்குகளைப் பகுப்பாய்வு செய்தது.
  • இந்த அறிக்கையின்படி, வேளாண் உணவு இலக்குகள் உட்பட 2030 ஆம் ஆண்டு நிலையான மேம்பாட்டு இலக்குகளை அடைய வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
  • எதிர்காலத்தில் நிலையான உணவுப் பாதுகாப்பின்மை, வளங்களின் சீரழிவு மற்றும் நீடித்து நிலைக்க முடியாத பொருளாதார மேம்பாடு ஆகியவற்றை உலகம் எதிர் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • உணவுப் பாதுகாப்பு, ஊட்டச்சத்துப் பாதுகாப்பு மற்றும் ஒட்டு மொத்த நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு விளைவுகளைக் கொண்டு வரும் வேளாண் உணவு முறைகளுக்கான பின்வரும் நான்கு எதிர்கால சூழ்நிலைகளை இந்த அறிக்கை கணித்துள்ளது.
    • ஒரே மாதிரியான சூழ்நிலைகள்
    • நிகர் செய்யப்பட்ட எதிர்காலம்
    • அதிகப்படியான போட்டி
    • நிலைத்தன்மைக்கான வர்த்தகப் பரிமாற்றம்,

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்