உணவு முறைகளுக்காக வேண்டி தேசிய அளவிலான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) மேம்படுத்துதல் அறிக்கை
September 7 , 2020 1540 days 643 0
இது உலகளாவிய நிதியம் (WWF - World Wide Fund), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nations Environment Programme), மற்றும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான EAT & think tank Climate Focus ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
இது உணவு முறைத் தீர்வுகள் மற்றும் மிக அதிக முதன்மையான இலக்குகளை கொள்கை வகுப்பாளர்கள் நிர்ணயிப்பதையும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அதன்மூலம் உயிரிப் பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, உணவு முறையின் உற்பத்தி, செயல்பாடு, பகிர்தல், தயார் நிலை மற்றும் உணவின் நுகர்வு ஆகியவை 37% என்ற அளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வு நிகழ்விற்குப் பொறுப்பாக உள்ளது.
2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, நாடுகள் அவர்களது NDCக்களை (Nationally Determined Contribution) ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.