TNPSC Thervupettagam

உணவு முறைகளுக்காக வேண்டி தேசிய அளவிலான நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) மேம்படுத்துதல் அறிக்கை

September 7 , 2020 1540 days 641 0
  • இது உலகளாவிய நிதியம் (WWF - World Wide Fund), ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP - United Nations Environment Programme), மற்றும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான EAT & think tank Climate Focus ஆகியவற்றினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • இது உணவு முறைத் தீர்வுகள் மற்றும் மிக அதிக முதன்மையான இலக்குகளை கொள்கை வகுப்பாளர்கள் நிர்ணயிப்பதையும் பசுமை இல்ல வாயுக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதையும் அதன்மூலம் உயிரிப் பன்முகத்தன்மை, உணவுப் பாதுகாப்பு, பொதுச் சுகாதாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த அறிக்கையின்படி, உணவு முறையின் உற்பத்தி, செயல்பாடு, பகிர்தல், தயார் நிலை மற்றும் உணவின் நுகர்வு ஆகியவை 37% என்ற அளவில் பசுமை இல்ல வாயு உமிழ்வு நிகழ்விற்குப் பொறுப்பாக உள்ளது.
  • 2015 ஆம் ஆண்டு பாரீஸ் ஒப்பந்தத்தின் படி, நாடுகள் அவர்களது NDCக்களை (Nationally Determined Contribution) ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்