“2030 ஆம் ஆண்டில் உணவு முறைகளை மாற்றுவதற்கான அறிமுக தளமாக ஆளுகை மற்றும் தகவமைப்பு” என்ற ஒரு புதிய ஆய்வறிக்கையானது நேச்சர் ஃபுட் என்ற இதழில் வெளியிடப் பட்டுள்ளது.
இது ஐந்து கருப்பொருள்களில், 42 உலகளாவிய உணவு அமைப்புக் குறிகாட்டிகளைக் கண்காணிக்கிறது.
பல ஆண்டுகளாக மிகவும் நன்கு பகுப்பாய்வு செய்யப்பட்ட சுமார் 42 அளவுருக்களில் இருபது அளவுருக்களில் மேம்பாடு பதிவாகியுள்ளது.
பாதுகாப்பான நீர் மற்றும் காய்கறிகளின் கிடைக்கும் தன்மையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஆகியவைக் குறிப்பிடத்தக்கச் சாதனைகளில் அடங்கும்.
தாவர மற்றும் விலங்கு மரபணு வளங்களின் பாதுகாப்பும் மேம்பட்டுள்ளது.
பருவநிலை சார்ந்த பல்வேறு தாக்கங்கள் மற்றும் பிற இடையூறுகளுக்கு ஏற்ப உணவு அமைப்புகளின் தகவமைப்பினை வலுப்படுத்தும் நடவடிக்கையும் மேம்பட்டுள்ளது.
உணவு விலை ஏற்ற இறக்கம், அரசாங்கப் பொறுப்புக் கூறல் மோசமடைதல் மற்றும் பொதுச் சமூகத்தின் பங்கேற்பு குறைதல் மற்றும் இதர 4 குறிகாட்டிகளில் குறிப்பிடத் தக்க சரிவுப் பதிவாகியுள்ளன.
மிக அதிகளவு பதப்படுத்தப்பட்ட ஒரு உணவு விற்பனை, உணவு அமைப்புகளிலிருந்து வரும் உமிழ்வு, வேளாண்மைக்கான நீர் எடுப்பு உள்ளிட்ட 15 குறிகாட்டிகளில் எந்த ஒரு மாற்றமும் பதிவாகவில்லை.