ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
குறைவான வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான உணவு இறக்குமதி மதிப்பீடுகளில் இந்த ஆண்டு 1.5 சதவீதம் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
நிகர உணவு இறக்குமதியாளராக இருக்கும் சில வளர்ந்து வரும் நாடுகள் 4.9 சதவீதம் சரிவினை எதிர் கொள்ளக் கூடும்.
உலக உணவு வர்த்தக மதிப்பீடுகள் ஆனது 2022 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 1.5 அளவு சதவீதம் அதிகரித்து, 2023 ஆம் ஆண்டில் 1.98 டிரில்லியன் டாலராக உயரும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
உலக அரிசி உற்பத்தியானது, 2023-24 ஆம் ஆண்டில் 1.3 சதவீதம் அளவு அதிகரித்து 523.5 மில்லியன் டன்னாக உயரும் என கணிக்கப் பட்டுள்ளது.
சர்வதேச வர்த்தகமானது அளவின் அடிப்படையில் 4.3 சதவீதம் குறைந்து 53.6 மில்லியன் டன்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டில் சுமார் 777 மில்லியன் டன்னாக இருந்த அதிகபட்சக் கோதுமையின் உற்பத்தியானது 2023 ஆம் ஆண்டில் 3 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப் படுகிறது.