TNPSC Thervupettagam

உணவுக் கழிவுகள் குறியீட்டு அறிக்கை 2024

April 2 , 2024 107 days 429 0
  • 2022 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள குடும்பங்கள் ஒரு நாளைக்கு சுமார் ஒரு பில்லியனுக்கும் அதிகமான உணவை வீணாக்குகின்றன.
  • இந்த ஆண்டில் 783 மில்லியன் மக்கள் பட்டினி நிலையை எதிர்கொண்டனர் மற்றும் மூன்றில் ஒரு பகுதியினர் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டனர்.
  • 2022 ஆம் ஆண்டில், சுமார் 1.05 பில்லியன் டன் உணவுக் கழிவுகள் அளவில் (உட்கொள்ள முடியாத உணவுகள் உட்பட) உருவாக்கப்பட்டன.
  • இது ஒரு நபருக்கு 132 கிலோகிராம் கழிவுகள் ஆகவும், நுகர்வோருக்கு கிடைக்கப் பெறும் அனைத்து உணவில் சுமார் ஐந்தில் ஒரு பங்கு ஆகவும் உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் வீணடிக்கப் படும் மொத்த உணவில், வீடுகளில் 60 சதவீதமும், உணவுச் சேவை நிறுவனங்களில் 28 சதவீதமும், சில்லறை விற்பனைகளில் 12 சதவீதமும் வீணடிக்கப் படுகின்றன.
  • உணவு வீணடிக்கப்படுதல் மற்றும் உணவுக்கழிவுகள் ஆனது, விமானத் துறையில் பதிவான உமிழ்வினை விட சுமார் 5 மடங்கு அதிகமாக, சுமார் 8 முதல் 10% வருடாந்திர உலகளாவியப் பசுமை இல்ல வாயு உமிழ்வினை ஏற்படுத்தியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்