ஐரோப்பிய ஒன்றியம், ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (Food and Agriculture Organization of the United Nations - FAO) மற்றும் ஐக்கிய நாடுகள் உலக உணவுத் திட்டம் ஆகியவை ஒன்றிணைந்து உணவுப் பற்றாக்குறை மீதான சர்வதேச அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இது 2018 ஆம் ஆண்டில் 53 நாடுகளில் ஏறத்தாழ 113 மில்லியன் மக்கள் மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர் கொண்டிருந்தனர் என்பதைக் கண்டறிந்துள்ளது.
ஏறத்தாழ பட்டினியை எதிர்கொண்டிருக்கும் மூன்றில் இரண்டு பகுதி மக்கள் 8 நாடுகளில் உள்ளனர். அந்த நாடுகளாவன: ஆப்கானிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா, நைஜீரியா, தெற்கு சூடான், சூடான், சிரியா மற்றும் ஏமன் ஆகியவையாகும்.
மிகக் கடுமையான உணவுப் பற்றாக்குறை என்பது பட்டினியின் மிகக் கொடிய வடிவமாகும்.