TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த பிராந்திய கண்ணோட்டம் 2023

December 16 , 2023 216 days 199 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆனது உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து 2023: புள்ளியியல் மற்றும் போக்குகள் என்ற பிராந்தியக் கண்ணோட்ட அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
  • 2021 ஆம் ஆண்டில், 74.1% இந்தியர்களால் ஆரோக்கியமான உணவை வாங்க முடிய வில்லை.
  • 2020 ஆம் ஆண்டில், இது 76.2 சதவீதமாக இருந்தது.
  • பாகிஸ்தானில் 82.2% பேரும், வங்காளதேசத்தில் 66.1% பேரும் மிக ஆரோக்கியமான உணவைப் பெறுவதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
  • உயர்ந்து வரும் உணவு விலைகள், உயர்ந்து வருமம் வருமானத்துடன் ஈடாகவில்லை எனவே, அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க இயல வில்லை.
  • நாட்டின் மக்கள் தொகையில் 16.6% பேர் ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டவர்களாக உள்ளனர் என இந்த அறிக்கை கூறுகிறது.
  • நாட்டின் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 31.7% அளவில் பேர் வளர்ச்சி குன்றிய நிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • ஐந்து வயதிற்குட்பட்ட 18.7% குழந்தைகள் இந்த முக்கிய உடல்நலப் பிரச்சனையை எதிர்கொள்வதனால் வளர்ச்சிக் குறைபாடு (உயரத்திற்கு ஏற்ற எடையின்றி இருத்தல்) பிரிவில் இந்தியா அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 2.8% பேர் அதிக எடை கொண்டவர்களாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.
  • இந்தியாவில் உள்ள 15 முதல் 49 வயதிற்குட்பட்ட பெண்களில் 53% பேர் இரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இது 2019 ஆம் ஆண்டில் இந்தப் பிராந்தியத்தில் பதிவான மிகப்பெரிய விகிதமாகும்.
  • 0 முதல் 5 மாதம் வரையான குழந்தைகளுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் வழங்குதல் விகிதத்தில் 63.7% சதவீதத்துடன் இந்தியா அதன் தரத்தினை மேம்படுத்தியுள்ளது.
  • இது உலகளவில் பதிவான அளவை (47.7%) விட அதிகம் ஆகும்.
  • இந்தப் பிராந்தியத்தில், பிறப்பின் போது குறைந்த எடை கொண்ட குழந்தைப் பிறப்பு இந்தியாவில் அதிக அளவில் (27.4%) உள்ள நிலையில் அதைத் தொடர்ந்து வங்காள தேசம் மற்றும் நேபாளம் ஆகியவை உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்