உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2023
June 11 , 2023
408 days
1094
- இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தனது 5வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
- 2022-23 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் தமிழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
- இந்தக் குறியீட்டில் பஞ்சாப் இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
- இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
- சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா மாநிலம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
- ஒன்றியப் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
- கடந்த ஆண்டு, 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தது.
- 2020-21 ஆம் ஆண்டில் குஜராத் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றிருந்தன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/11-64.png)
Post Views:
1094