TNPSC Thervupettagam

உணவுப் பாதுகாப்புக் குறியீடு 2023

June 11 , 2023 408 days 1093 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது தனது 5வது மாநில உணவுப் பாதுகாப்புக் குறியீட்டினை வெளியிட்டுள்ளது.
  • 2022-23 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்புக் குறியீட்டில் தமிழகத்தினைப் பின்னுக்குத் தள்ளி கேரள மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இந்தக் குறியீட்டில் பஞ்சாப் இரண்டாவது இடத்தினைப் பெற்றுள்ளது.
  • இதில் தமிழ்நாடு மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
  • சிறிய மாநிலங்கள் பிரிவில், கோவா மாநிலம் முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
  • ஒன்றியப் பிரதேசங்களில் ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முறையே முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றன.
  • கடந்த ஆண்டு, 20 பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா அடுத்தடுத்த இடங்களிலும் இருந்தது.
  • 2020-21 ஆம் ஆண்டில் குஜராத் முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் இரண்டாமிடத்திலும், தமிழ்நாடு மூன்றாவது இடத்திலும் இடம் பெற்றிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்