தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ல் விடுபட்ட 25 லட்சம் மக்கள் பயனடையும் வகையில் மாநில உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை ஒடிசா மாநில அரசு தொடங்கியுள்ளது.
காந்தி ஜெயந்தி நிகழ்ச்சியின்போது ஒடிசா முதலமைச்சர் இத்திட்டதைத் தொடங்கி வைத்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் விற்பனையின்போது மின்னணு முறையில் பணம் செலுத்தும் சாதனம் மூலம் (e-pos/electronic point of sale) அரிசி விநியோக முறை மேற்கொள்ளப்படும்.