இந்திய மருத்துவ ஆராய்ச்சி சபையானது பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் விளக்க அட்டைகளில் உள்ள பல்வேறு தவறான தகவல்கள் தவறாக வழி நடத்துதலை வழங்குவதாக எச்சரித்துள்ளது.
சர்க்கரை உட்கூறு இல்லாத உணவுகளில் கொழுப்புகள் இருக்கலாம் அதே சமயம் பொதியாக்கப்பட்ட பழச்சாறுகளில் 10 சதவீதம் மட்டுமே பழ கூழ் இருக்கும்.
உணவுப் பொருளில் செயற்கை வண்ணமேற்றிகள் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் அல்லது செயற்கைப் பொருட்கள் எதுவும் சேர்க்கப்படாமல், குறைந்த அளவு பதப்படுத்துதல் செயல்முறைக்கு அவை உட்படுத்தப்பட்டிருந்தாலே அதை 'இயற்கை' உணவுப் பொருள் என்று அழைக்கலாம்.
'ஊட்டச்சத்து குறித்த தகவல்கள்' மற்றும் 'ஊட்டச்சத்து அளவு /ஊட்டச்சத்து தகவல் கோரல்கள்’ ஆகிய இரண்டும் ஒரே மாதிரியானவை என்ற ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது.
ஊட்டச்சத்து தகவல் குறித்த கோரல்கள் என்பது ஒரு உணவில் குறிப்பிட்ட ஊட்டச்சத்து பண்புகள் இருப்பதைத் தெரிவிக்கும் அல்லது குறிக்கும் எந்தவொரு அறிக்கையையும் குறிக்கிறது.
விளக்க அட்டையில் குறிப்பிடப்படும் அனைத்து ஊட்டச்சத்து தகவல்களும் குறிப்பிடப் பட்ட உட்கொள்ளல் அளவை அடிப்படையாகக் கொண்டவையாகும்.