TNPSC Thervupettagam

உணவுப் பொருட்களுக்கான விரைவுக் குறியீடுகள்

November 2 , 2023 260 days 213 0
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) ஆனது, பார்வைத் திறன் குறைபாடுள்ள நபர்கள் எளிதில் அணுகக் கூடிய உணவுப் பொருட்களில் விரைவுக் குறியீட்டினைச் (QR) சேர்ப்பதற்குப் பரிந்துரைத்துள்ளது.
  • இந்த புதிய விரைவுக் குறியீடுகள் ஆனது தயாரிப்புப் பொருட்களின் இடுபொருட்கள், ஊட்டச்சத்து குறித்த தகவல், ஒவ்வாமை காரணிகள், உற்பத்தி தேதி, முன் பயன்பாட்டு தேதி /காலாவதி/இறுதி பயன்படுத்துதல், ஒவ்வாமை எச்சரிக்கை மற்றும் வாடிக்கையாளர் விசாரணைகளுக்கான தொடர்பு தகவல் உள்ளிட்ட பல விரிவான விவரங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
  • ஒரு வகை இரு பரிமாண அணிக்கோவை பட்டைக் குறியீடான QR குறியீடு என்பது 1994 ஆம் ஆண்டில் வாகனப் பாகங்களை முத்திரையிடுவதற்காக என்று டென்சோ வேவ் எனப்படும் ஜப்பானிய நிறுவனத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது.
  • பல்வேறு அறிக்கைகளின்படி, அமெரிக்கா, இந்தியா, பிரான்சு மற்றும் ஐக்கியப் பேரரசு ஆகியவை QR குறியீட்டை அதிகம் பயன்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்