இந்தத் தீநுண்மியானது முதன்முதலில் 2009 ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. சீனா 2011 ஆம் ஆண்டில் இந்த தீநுண்மியின் நோய்க்கிருமியை தனிமைப் படுத்தியது.
இது புன்யா என்ற தீநுண்மி வகையைச் சேர்ந்தது.
இது இரத்த நுண் தட்டுகள் குறைபாடு நோய்க்குறியுடன் கடுமையான காய்ச்சலை (SFTS - Severe fever with thrombocytopenia syndrome) ஏற்படுத்துகிறது.
இந்த தீநுண்மியானது பூனைகள், எலிகள், முள்ளம்பன்றிகள் (hedgehogs), மரநாய்கள் (weasels), பிரஷ்டைல் போசம்ஸ் (brushtail possums) மற்றும் யாக் (yak) உள்ளிட்ட பாலூட்டிகளைப் பாதிக்கும் என்று அறியப்படுகிறது.