உண்மை சரிபார்ப்புப் பிரிவு குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு
March 25 , 2024 248 days 241 0
உச்ச நீதிமன்றமானது திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப (IT) விதிகளின் மீதான செயலாக்கத்தினை நிறுத்தி வைத்துள்ளது.
"உண்மை சரிபார்ப்புப் பிரிவு" (FCU) மூலம் சமூக ஊடக தளங்களில் பரவும் "போலிச் செய்திகளை" அடையாளம் காண இந்த விதி அரசாங்கத்திற்கு அதிகாரம் அளித்தது.
மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஆனது, FCU பிரிவினைப் பத்திரிகைத் தகவல் வாரியத்தின் கீழ் ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக அறிவித்தது.
சமூக ஊடகத் தளங்களில் மத்திய அரசு மற்றும் அதன் முகமைகள் தொடர்பான தவறான தகவல் பரவலை நிறுத்தும் அதிகாரம் இதற்கு உண்டு.
முன்னதாக, மும்பை உயர் நீதிமன்றம் ஆனது, “அரசு ஆனது ஒரு உரையினை உண்மை அல்லது பொய் என்று கட்டாயப்படுத்தி வகைப்படுத்த முடியாது மற்றும் அதனை வெளியிடக் கூடாது என்று கட்டாயப்படுத்த முடியாது எனக் கூறியது.
மேலும் இந்த விதிகள் ஆனது அரசியலமைப்பின் 14, 19(1)(a) மற்றும் (g), மற்றும் 21 ஆகிய சட்டப் பிரிவுகள் மற்றும் 2000 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 79வது பிரிவு (IT சட்டம்) ஆகியவற்றை மீறுவதாக வாதிடப் படுகிறது.