உண்மை நேர அளவில் சுனாமி ஆழிப் பேரலைகளின் மூழ்கடிப்பு
December 27 , 2017 2526 days 789 0
உண்மை நேர அளவில் (real time), சுனாமி ஆழிப் பேரலைகளினால் ஏற்படுத்தப்படும் மூழ்கடிப்பின் விஸ்தீரன அளவை (extent of inundation) முன்கணித்த முதல் நாடாக இந்தியா உயர்ந்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பெருங்கடல் தகவலியல் அறிவியலுக்கான இந்திய தேசிய மையத்தில் (Indian National Centre for Ocean information Sciences), இந்திய சுனாமி ஆழிப் பேரலைகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை மையம் (Indian Tsunami early warning centre-ITEWC) தொடங்கப்பட்ட பிறகு ஏற்படுத்தப்பட்ட முதல் முக்கியமான மைல்கல் இதுவே ஆகும்.
பெருங்கடல் தகவலியல் அறிவியலுக்கான இந்திய தேசிய மையம் (INCOIS) மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஓர் தன்னதிகார சுயாட்சி (Autonomous) அமைப்பாகும்.
தற்போது நடப்பில், ITEWC மையமானது சுனாமி ஆழிப்பேரலைகள் கடற்கரைகளைத் தாக்கவல்ல சாத்திய நேரத்தையும், அவற்றின் சாத்தியமான உயரத்தையும் பற்றிய தகவல்களை வழங்குகிறது.
தற்போது தொழிற்நுட்ப ரீதியாக இம்மையம் மேம்படுத்தப்பட்டுள்ளதால், சுனாமி ஆழிப் பேரலைகளினால் உண்டாக்கப்படும் மூழ்கடிப்பின் விஸ்தீரனத்தையும், அதன் அளவையும் (Extent and level) முன்கணிப்பின் வழியாக இம்மையத்தினால் முன்கூட்டியே கூற இயலும்.
ஆஸ்திரேலியா, இந்தோனேசியா, இந்தியப் பெருங்கடலின் கரை நாடுகள் (Indian Ocean Rim Countries) போன்ற அனைத்து இந்தியப் பெருங்கடலியல் நாடுகளுக்கும் இது பெரும் உதவியாக அமையும்.