தெலுங்கானா, தமிழ்நாடு மற்றும் இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் 2024 ஆம் நிதியாண்டில் உண்மையான மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் (GSDP) அதிக வளர்ச்சி பதிவாகியுள்ளது.
ஒன்பதாவது பெரிய மாநிலமான தெலுங்கானாவின் பொருளாதார வளர்ச்சி ஆனது, 9.2 சதவீதமாக வளர்ந்து அதன் உண்மையான GSDPயாக 7.9 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
இது தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியான 8.2 சதவீதத்தை விட மிகவும் விரைவானதாக உள்ளது.
மூன்றாவது பெரிய மாநிலமான தமிழ்நாடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி ஆனது 8.2 சதவீதம் வளர்ச்சியடைந்து 15.7 லட்சம் கோடி ரூபாயை எட்டியது.
தமிழ்நாட்டின் மொத்த மதிப்புக் கூட்டலில் (GVA) 52 சதவிகிதத்தைக் கொண்டிருக்கும் சேவைத் துறையானது 9 சதவிகிதத்தில் வளர்ந்தது.
ஏழாவது இடத்தில் உள்ள இராஜஸ்தான் 8 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.
24.1 லட்சம் கோடி என்ற உண்மையான GSDP உடன் மகாராஷ்டிரா மாநில அரசானது இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதாரமாகத் தொடர்ந்து திகழ்கிறது.
2023 நிதியாண்டில் குஜராத் இரண்டாம் இடத்தில் இருந்தது,