TNPSC Thervupettagam

உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 2024-25

April 7 , 2025 10 days 113 0
  • 2024-25 ஆம் ஆண்டில் பதிவான 9.69% என்ற அளவிலான தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் ஆனது இந்தியாவிலேயே மிக அதிகபட்ச விகிதமாக உள்ளது.
  • ஒன்றிய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகத்தின் படி வெளியிடப் பட்டத் தரவுகள் இவை ஆகும்.
  • இது கடந்த 10 ஆண்டுகளில் மாநிலத்தில் பதிவான மிக அதிகபட்ச விகிதமாகும்.
  • நிலையான விலைகளில் (அடிப்படை ஆண்டு: 2011-12), தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் (GSDP) மதிப்பு ஆனது, 2023-24 ஆம் ஆண்டில் 15,71,368 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • இது 2024-25 ஆம் ஆண்டில் 17,23,698 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
  • இதன் முந்தைய அதிகபட்ச மதிப்பு ஆனது 2017-18 ஆம் ஆண்டில் 8.59% ஆக இருந்தது.
  • மிகக் குறைந்த (0.07%) விகிதமானது கோவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்ட 2020-21 ஆம் ஆண்டில் தான் பதிவாகியுள்ளது.
  • அப்போது மற்ற மாநிலங்கள் எதிர்மறையான முன்னேற்றத்தைப் பதிவு செய்த போது கூட தமிழ்நாடு நேர்மறையான முன்னேற்றத்தைப் பதிவு செய்தது
  • உண்மையான வளர்ச்சி விகிதம் என்ற சொல்லானது, பணவீக்கத்தை உள்ளடக்காத விகிதத்தைக் குறிக்கிறது.
  • 2024-25 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் பெயரளவு வளர்ச்சி விகிதம் ஆனது 14.02% ஆகும் என்ற நிலையில் இது இந்திய மாநிலங்களில் மிக அதிகபட்சமாகும்.
  • மாநிலத்தின் இந்த செயல்திறன் ஆனது மூன்றாம் நிலை (சேவைகள்) துறையில் 12.7% வளர்ச்சியாலும், இரண்டாம் நிலை (இரண்டாம் நிலை) துறையில் 9% வளர்ச்சியாலும் உந்தப்பட்டுள்ளது.
  • முதன்மைத் துறையின் செயல்திறன் ஆனது மிக மோசமாக 0.15% என்ற விகிதத்தில் உள்ளது.
  • முதன்மைத் துறையில் பயிர்கள் மற்றும் கால்நடைத்துறை ஆகியன முக்கியத்துவம் வாய்ந்தத் துறைகளாகும்.
  • இந்த மாநிலத்தின் ஒட்டு மொத்த மதிப்புக் கூட்டலில் சேவைத் துறையின் பங்களிப்பு என்பது 53 சதவீதமாக உள்ள நிலையில் இதனைத் தொடர்ந்து உற்பத்தித் துறையின் பங்களிப்பு என்பது 37% என்ற அளவிலும் விவசாயத் துறையின் பங்களிப்பு என்பது 10% என்ற அளவிலும் உள்ளன.
  • 2021-22 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு தொடர்ச்சியாக 8% முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது.
  • அடுத்து வரும் வருடங்களில் மிக வலுவான ஏற்றுமதியுடன் சேர்ந்து இந்த மாநிலம் 9.7% என்ற அளவில் முன்னேற்றத்தைப் பதிவு செய்தால் 2032/33 ஆம் ஆண்டிற்குள்ளாக ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாக இந்த மாநிலம் மாறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்