உதய் திட்டத்தின் இரண்டாவது ஆண்டு நிறைவையொட்டி நாகாலாந்து மாநிலமும் , அந்தமான் & நிகோபார், தாத்ரா நகர் ஹவேலி, டையூ & டாமன் போன்ற யூனியன் பிரதேசங்களும் தங்கள் மின் விநியோக அமைப்புகளின் செயல்பாட்டு மேம்பாட்டிற்காக (UDAY) உதய் திட்டத்தில் சேர மத்திய அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளன.
UDAY
UDAY – Ujwal Discom Assurance Yojana.
இது மத்திய மின்துறை அமைச்சகத்தின் திட்டமாகும்.
இது நாடு முழுவதும் உள்ள அரசு மின் விநியோக நிறுவனங்களுக்கு (Discom) நிதியியல் மற்றும் செயல்பாட்டு உந்துதலை தருவதற்காக தோற்றுவிக்கப்பட்டது.
இதன் கீழ் நான்கு நடவடிக்கைகள் மூலம் அனைத்து DISCOM களையும் 2018-2019ல் இலாபரகமானவையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்நான்காவன,
DISCOM-களின் செயல்பாட்டு திறனை அதிகரித்தல்
மின்சாரத்திற்கான செலவை குறைத்தல்
DISCOM-களின் வட்டி செலவை குறைத்தல்
மாநில நிதிகளுடன் ஒருங்கமைப்பதன் மூலம் DISCOM-களில் நிதி ஒழுக்கத்தை செயல்படுத்தல்
இத்திட்டத்தின் கீழ் DISCOM-களின்கடன்களுக்கு மாநில அரசு பொறுப்பேற்கும்.