நிலக்கரியின் தரத்தைக் கண்காணிப்பதற்காக மத்திய இரயில்வே மற்றும் நிலக்கரி அமைச்சரான பியூஸ் கோயல் உத்தம் என்ற செயலியை வெளியிட்டுள்ளார்.
உத்தம் என்ற வார்த்தை “வெட்டியெடுக்கப்பட்ட நிலக்கரியை மூன்றாம் தரப்பு மதிப்பிடுவதில் வெளிப்படைத் தன்மையை கொணர்தல்” என்ற அர்த்தத்தில் (Unlocking Transparency by Third Party Assessment of Mined Coal) விரிவாக நீள்வது ஆகும்.
இந்த செயலி மத்திய நிலக்கரி அமைச்சகம் மற்றும் நிலக்கரி இந்தியா (Coal India) நிறுவனத்தால் இணைந்து தயாரிக்கப்பட்டது.
இந்த செயலி நிலக்கரியின் தரத்தை கண்காணிப்பதில் வெளிப்படைத் தன்மை மற்றும் செயலாக்கத்தை உறுதி செய்யவும், நிலக்கரி நிர்வாகத்தை மக்களிடம் கொண்டு செல்லவும் எண்ணுகிறது.
இந்த செயலி, நிலக்கரி சுற்றுச்சூழலில் குடிமக்களை அதன் பங்குதாரர்களாக மாற்றும் எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.