உத்தரகாண்ட் மாநிலத்தில் கோவிந்த்காட் முதல் ஹேம்குண்ட் சாஹிப் ஜி (12.4 கி.மீ) மற்றும் சோன்பிரயாக் முதல் கேதார்நாத் (12.9 கி.மீ) வரையில் ஆகிய இரண்டு முக்கிய கம்பிவடப் போக்குவரத்து சேவைத் திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பர்வத்மாலா பரியோஜனா எனப்படுகின்ற தேசியக் கம்பிவடப் போக்குவரத்து சேவை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் சுமார் 7,000 கோடி ரூபாய் செலவில் இது கட்டமைக்கப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது கடல் மட்டத்திலிருந்து 3,500 மீட்டருக்கு மேலான உயரத்தில் அமைந்துள்ள புனித யாத்திரைத் தலங்களுக்கான பயண நேரத்தைக் குறைக்கும்.