TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தின் மீட்புப் பணி

November 29 , 2023 233 days 268 0
  • தேசியப் பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF) குழுக்களின் ஒரு வெற்றிகரமான மீட்பு நடவடிக்கையின் மூலம் உத்தரகாண்டில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்டெடுக்கப் பட்டனர்.
  • சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் இருந்துத் தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவதற்காக அதிகாரிகள் இது வரை பல நுட்பங்களைப் பயன்படுத்தி வந்தனர்.
  • பல்வேறு மீட்பு நுட்பங்களில், எலி வளைச் சுரங்கம் (கை முறை துளையிடுதல்) மிகவும் அபாயகரமானதாக மற்றும் ஆபத்தானதாக கருதப்படுகிறது.
  • அமெரிக்க நிறுவனத்தின் துளையிடும் இயந்திரமானது சுரங்கப்பாதையில் இருந்து சேதமடைந்ததை அடுத்து அது வெளியே எடுக்கப்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையின் கடைசி முயற்சியாக எலி வளை சுரங்கத் தொழிலாளர்கள் அந்தப் பணியில் ஈடுப்பட்டனர்.
  • எலிவளைச் சுரங்கம் என்பது, சிறு குழிகளை தோண்டி நிலக்கரியை எடுக்கும் முறை ஆகும்.
  • 3 முதல் 4 அடிக்கு சிறிய சுரங்கங்களைக் கையால் தோண்டி, அதன் மூலம் தொழிலாளர்கள் நுழைந்து நிலக்கரியை வெளியே எடுப்பர்.
  • ஆனால் இது அறிவியல்பூர்வமற்றது என்பதால் அதனை நிலக்கரி எடுப்பதற்கு எனப் பயன்படுத்துவதற்கு 2014 ஆம் ஆண்டில் தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தினால் தடை செய்யப்பட்டது.
  • மேகாலயாவில், குறிப்பாக மேற்கு ஜெயிந்தியா மலைகள், கிழக்கு ஜெயிந்தியா மலைகள் மற்றும் மேற்கு காசி மலைகளில் எலிவளைச் சுரங்க முறை அதிகமாக பயன்பாட்டில் இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்