உத்தரகாண்ட் மாநில அமைச்சரவையானது பூ கனூன் (நிலச் சட்டத் திருத்த மசோதா) மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது 11 மலைப்பாங்கான மாவட்டங்களைச் சேராத நபர்கள், அங்கு வேளாண்மை / தோட்டக் கலை மற்றும் குடியிருப்பு நிலங்களை வாங்குதல் மற்றும் அதை விற்பனை செய்தல் தொடர்பான கடுமையான விதிகளைக் கொண்டிருக்கும்.
வேளாண் நிலங்களை வாங்குவதற்கான முழுமையான தடை மாநிலத் தலைநகரான டேராடூன் மற்றும் வேறு சில மாவட்டங்களில் பொருந்தும்.
ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் போன்ற மாவட்டங்களில் வேளாண்/தோட்டக்கலை நிலங்களை வாங்க அனுமதிக்கப்படும்.
இந்த நடவடிக்கையானது அந்த மாநிலக் குடிமக்களின் வளங்கள், பெரும் கலாச்சாரப் பாரம்பரியம் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.