முதன்முறையாக, உத்தரகாண்ட் மாநிலத்தின் 18 தயாரிப்புகள் ஒரே நாளில் புவிசார் குறியீட்டினைப் பெற்றுள்ளன.
இந்த வகையில் இந்தியாவில் உத்தரகாண்ட் இவ்வகையிலான முதல் மாநிலமாகும்.
தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் (DPIIT) துறையின் புவிசார் குறியீட்டுப் பதிவுப் பிரிவினால் உள்ளூர் தயாரிப்புகளுக்குப் புவிசார் குறியீடு வழங்கப் படுகிறது.
புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள் பின்வருமாறு : பெரினாக் தேயிலை, மாண்டுவா, ஜாங்கோரா, கஹாட் பருப்பு, சிகப்பு அரிசி, பிளாக் பட் (கருப்பு அவரை), மால்டா பழங்கள், அமராந்த் - தண்டு கீரை (ராம்தானா), அல்மோராவின் லக்கௌரி மிளகாய், துவரைப் பருப்பு, புரான்ஷ் ஜூஸ், சிறுகாஞ்சொறி (கண்டலி) இழை, நைனிடால் மெழுகுவர்த்தி, ரங்வாலி பிச்சோடா , ராம்நகரின் லிச்சி, நைனிடாலின் பீச் பழம், சாமோலி முகக்கவசம், உத்தரகாண்ட் மரக் கலை வேலைப்பாடுகள்.
இங்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றத் தயாரிப்புகள்: பிரியாணி இலை, பாஸ்மதி அரிசி, போட்டியா டான், ஐபன் கலை, சியுரா எண்ணெய், முன்சியாரி வெள்ளை காராமணிப் பயறு, ரிங்கல் கைவினை பொருள், தம்ரா மற்றும் துல்மா.