TNPSC Thervupettagam

உத்தரகாண்ட் மாநில உருவாக்கத் தினம் - நவம்பர் 09

November 13 , 2022 651 days 192 0
  • இந்தத் தினமானது, உத்தரகாண்ட் மாநிலத்தின் மாநில உருவாக்கத் தினமாகக் கொண்டாடப் படுகிறது.
  • 1994 ஆம் ஆண்டில் ஒரு தனி மாநிலம் பெறுவதற்கான கோரிக்கையானது முழு வடிவம் பெற்றது.
  • இதன் விளைவாக 2000 ஆம் ஆண்டு நவம்பர் 09 ஆம் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலம் உருவானது.
  • இது 2000 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் மூலம் உருவாக்கப் பட்டது.
  • இது "கடவுள்களின் தேசம்" அல்லது "தேவ பூமி" என்று அழைக்கப்படுகிறது.
  • இந்த மாநிலம் உருவாக்கப்பட்ட போது அதற்கு 'உத்தராஞ்சல்' என்று பெயரிடப் பட்டது.
  • பின்னர் 2007 ஆம் ஆண்டில் உத்தரகாண்ட் எனப் பெயர் மாற்றம் செய்யப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்