உச்ச நீதிமன்றம் ஆனது, 2004 ஆம் ஆண்டு உத்தரப் பிரதேச மதராஸா கல்விச் சட்டத்தின் (மதராஸா சட்டம்) அரசியலமைப்புச் செல்லுபடித் தன்மையினை உறுதி செய்தது.
ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தினை மீறுவதால் மதராஸாக்கள் உயர் கல்விப் பட்டங்களை வழங்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு ஆனது அஞ்சும் காத்ரி & மற்றவர்கள் Vs இந்திய ஒன்றியம் இடையிலான வழக்கு என்று அழைக்கப்படுகிறது.
மார்ச் 22 ஆம் தேதியன்று, அலகாபாத் உயர் நீதிமன்றம் ஆனது இந்தச் சட்டத்தினை "அரசியலமைப்புக்கு எதிரானது" என்றும், மதச்சார்பின்மைக் கொள்கையை மீறச் செய்வதாகவும் அறிவித்தது.
மதராஸாக்கள் இஸ்லாமியக் கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் முக்கிய மதச்சார்பற்றக் கல்வி ஆகிய இரண்டிலும் சமயக் கல்வியை வழங்குகின்றன.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள இந்த நிறுவனங்களுக்கு மதராஸா சட்டம் ஆனது ஒரு சட்டக் கட்டமைப்பை வழங்குகிறது.
இது உத்தரப் பிரதேச மதராஸா கல்வி வாரியத்தினை (வாரியம்) நிறுவியுள்ளது என்ற நிலையில் இந்த வாரியமானது அதற்கானப் பாடத் திட்டங்களையும் நன்கு தயாரித்து தீர்மானித்து, அனைத்து படிப்புகளுக்கும் தேர்வுகளை நடத்துகிறது.
இந்தச் சட்டம் மதராஸா கல்வியை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தையும் மாநில அரசுக்கு வழங்குகிறது.