1902 ஆம் ஆண்டில், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இது ஆக்ரா மற்றும் அவாத் ஐக்கிய மாகாணங்களாக நிறுவப்பட்டன.
சுதந்திரத்திற்குப் பிறகு, இந்த ஐக்கிய மாகாணங்கள் 1947 ஆம் ஆண்டில் ஒரு நிர்வாக அலகாக மாற்றப் பட்டதோடு 1949 ஆம் ஆண்டில் தெஹ்ரி கர்வால் மற்றும் ராம்பூர் ஆகிய சுதேச மாநிலங்கள் அதில் இணைக்கப்பட்டன.
இறுதியாக, 1950 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று, இந்த மாநிலமானது உத்தரப் பிரதேசம் என மறுபெயரிடப்பட்டது.
ஆனால் உத்தரப் பிரதேச தினமானது முதன்முதலில் 1989 ஆம் ஆண்டில் கொண்டாடப் பட்டது.
2000 ஆம் ஆண்டில், இந்த மாநிலத்தின் மலைப் பகுதிகள் பிரிக்கப்பட்டு, முதன்முதலில் உத்தராஞ்சல் என்று பெயரிடப்பட்டு, பின்னர் உத்தரக்காண்ட் என மறுபெயரிடப்பட்ட ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது.