மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவின் முதல் உத்தரவாதப் பத்திரக் காப்பீட்டு வசதியினை பஜாஜ் அலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து அறிமுகம் செய்தார்.
உத்தரவாதப் பத்திரங்கள் என்பது பொதுக் காப்பீட்டு நிறுவனங்களால் ஒப்பந்ததாரர் சார்பாக திட்ட வழங்கல் நிறுவனத்திற்கு வழங்கப்படும் ஒரு பண வழங்கீட்டு உத்தர வாதமாகும்.
உத்தரவாதப் பத்திரம், பரஸ்பர ரீதியாக ஒப்புக் கொள்ளப்பட்ட சில விதிமுறைகளின் பேரில் ஒரு நிறுவனத்திற்கு உத்தரவாத ஒப்பந்தத்தை அளிக்கிறது.
அந்த நிறுவனத்திற்கான ஓர் இடர் பரிமாற்றக் கருவியாக, இது அந்த நிறுவனத்தினை இழப்புகளிலிருந்துப் பாதுகாக்கிறது.
ஒரு வங்கியினால் வழங்கப்படும் உத்தரவாதத்தைப் போலன்றி, இந்த உத்திரவாதப் பத்திரக் காப்பீட்டிற்கு ஒப்பந்தக்காரரிடமிருந்து பெரிய பிணைத் தொகை எதுவும் பெற வேண்டிய அவசியமில்லை.