TNPSC Thervupettagam

உனது நகரங்களைத் திரட்டு – இந்தியா மற்றும் பிரான்சு

September 9 , 2018 2144 days 580 0
  • பசுமை இல்ல வாயுக்களின் உமிழ்வுகளை குறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வரும் மூன்று இந்திய நகரங்களுக்கு உதவுவதற்காக புது தில்லியில் இந்தியா மற்றும் பிரான்சு 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 அன்று ‘உனது நகரங்களைத் திரட்டு’ மீதான செயல்படுத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • இந்த முயற்சியானது 2015 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற 21-வது பருவநிலை மாறுபாட்டுக் கூட்டத்தில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அரசாங்கங்களால் ஆதரிக்கப்பட்ட சர்வதேச முயற்சியின் ஒரு பகுதியாகும்.
  • ‘உனது நகரங்களைத் திரட்டு’ என்பதன் நோக்கம் சோதனை அடிப்படையில் நாக்பூர், கொச்சி மற்றும் அகமதாபாத் ஆகிய 3 இந்திய நகரங்களை ஆதரிப்பது ஆகும்.

இத்திட்டத்தில் வழங்கப்படும் உதவிகள்

  • நீடித்த நகர போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் திட்டமிடுதலுக்கு உதவுவது.
  • நகரப் போக்குவரத்தை சீரமைப்பது, வழிகாட்டுவது மற்றும் திட்டமிடுதலுக்கான நிறுவனத் திறனை வலுப்படுத்துவதற்கு உதவுவது.
  • இந்தியா முழுவதும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்வதை ஊக்குவிப்பதற்காக மற்ற நகரங்களிடமிருந்து கற்றுக் கொள்ளுதல் மற்றும் பகிர்ந்து கொள்ளுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்