TNPSC Thervupettagam

உன்னத் பாரத் அபியான்

May 12 , 2018 2263 days 2172 0
  • மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ஏப்ரல் 25, 2018 அன்று புதுதில்லியில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் இரண்டாவது பதிப்பை தொடங்கியுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், நாடு முழுவதுமிருந்து 750 உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த மாணவர்கள், கிராமங்களைத் தத்தெடுப்பர். அதோடு மட்டுமல்லாமல் அக்கிராமங்களுக்குச் சென்று மக்களின் வாழ்க்கை முறைகள் மற்றும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளை அறிந்து கொள்வர்.
  • ஒவ்வொரு கிராமத்திலும் நான்கு துறைகளில் 25 வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், பள்ளித் தேர்வுகளில் 100% தேர்ச்சி அடைதல், ஊரகப் பகுதிகளில் வருமானத்தை அதிகரித்தல், கிராமங்களுக்கு குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை வழங்குதல், கிராமப்பகுதிகளிலுள்ள குப்பைகளை அகற்றுதல் ஆகியவற்றில் கிராமங்களுக்கு உதவிபுரிவது இத்திட்டத்தின் முக்கியக் கூறுகளில் உள்ளடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்