இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியமானது ரூ.57,128 கோடி உபரி நிதி அல்லது ஈவுத் தொகையை 2019-20 ஆம் ஆண்டில் மத்திய அரசிற்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
இது கடந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1.76 இலட்சம் என்பதிலிருந்து குறைந்து 67.5 சதவீதமாக உள்ளது.
கடந்த ஆண்டில் RBIயின் மத்திய வாரியமானது RBIயின் முன்னாள் ஆளுநரான பிமல் ஜலான் என்பவரின் தலைமையிலான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது.
இந்தக் குழுவானது RBIயின் உபரி நிதி இருப்பு மற்றும் அதன் பகுதியை அரசிற்கு அளிப்பது குறித்துப் பரிந்துரைப்பதற்காக ஏற்படுத்தப்பட்டது.