TNPSC Thervupettagam

உப்பு பற்றிய WHO வழிகாட்டுதல்கள்

February 20 , 2025 3 days 26 0
  • உலக சுகாதார அமைப்பு (WHO) ஆனது உப்புகளுக்கு மாற்றாக குறைந்த சோடியம் உள்ளடக்கம் கொண்ட மாற்றுகளைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கும் வழிகாட்டுதல் மீதான தொகுப்பை வெளியிட்டுள்ளது.
  • WHO ஆனது ஒரு நாளைக்கு சுமார் 2 கிராமுக்கு குறைவாக என்ற அளவில் சோடியம் உட்கொள்வதின் அளவினை குறைக்குமாறு பரிந்துரைத்துள்ளது.
  • தற்போது, வழக்கமானச் சமையலுக்கு பயன்படுத்தும் தூள் உப்பு/உப்பிற்குப் பதிலாக (சோடியம் குளோரைடு) பொட்டாசியம் குளோரைடு (KCl) போன்ற குறைந்த சோடியம் உள்ளடக்கம் கொண்ட உப்பு மாற்றுகளைப் பயன்படுத்த பரிந்துரை செய்துள்ளது.
  • இந்தப் பரிந்துரையானது வயது வந்த இளம் பருவத்தினருக்கே மட்டுமே பொருந்தும் (கர்ப்பிணிப் பெண்கள் அல்லது குழந்தைகளுக்கு அல்ல).
  • இது சிறுநீரகக் குறைபாடுகள் அல்லது பொட்டாசியம் வெளியேற்றத்திற்குச் சிக்கலை ஏற்படுத்தக் கூடிய பிற உடல் உபாதைகள் அல்லது நிலைமைகள் உள்ள நபர்களுக்குப் பொருந்தாது.
  • உலகளவில் ஒவ்வோர் ஆண்டும், மோசமான உணவு முறை காரணமாக சுமார் எட்டு மில்லியன் உயிரிழப்புகள் பதிவாகின்றன என்பதோடு 1.9 மில்லியன் உயிரிழப்புகள் ஆனது அதிக சோடியம் உட்கொள்வதால் ஏற்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்