TNPSC Thervupettagam

உமிழ்வு இடைவெளி அறிக்கை – 2019

November 28 , 2019 1827 days 701 0
  • ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டமானது 2019 ஆம் ஆண்டிற்கான தனது 10வது உமிழ்வு இடைவெளி அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பு இந்த அறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுகின்றது.
  • இந்த அறிக்கையானது 2030 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்படும் உமிழ்வுகளுக்கும் பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5° C மற்றும் 2° C என்ற இலக்குகளுடன் பொருந்தக்கூடிய உமிழ்வுகளுக்கும் இடையிலான இடைவெளியை மதிப்பிடுகின்றது.

இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டவைகள்

  • பசுமை இல்ல வாயு வெளியேற்றமானது கடந்த பத்து ஆண்டு காலத்தில் ஒரு ஆண்டிற்கு 1.5 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில் உமிழ்வுகள் = CO2க்கு சமமான 55.3 ஜிகா டன்கள்.
  • பாரிஸ் ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டாலும், தொழில்துறை வளர்ச்சிக்கு முந்தைய அளவை விட வெப்பநிலையானது 3.2° C ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இலக்கு

  • பாரிஸ் ஒப்பந்தத்தின் 1.5° C என்ற வெப்பநிலை இலக்கிற்குள் வெப்பநிலையைக் கட்டுப்படுத்த, 2020 மற்றும் 2030க்கு இடைப்பட்ட கால கட்டத்தில் உலகளாவிய பசுமை இல்ல வாயு உமிழ்வானது ஒவ்வொரு ஆண்டும் 7.6 சதவீதம் குறைய வேண்டும்.

மாசுபடுத்துவதில் முன்னணியில் உள்ள நாடுகள்

  • அதிக மாசுபடுத்தும் நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்து முறையே மூன்றாவது பெரிய பசுமை இல்ல வாயு உமிழ்வு நாடாக  இந்தியா விளங்குகின்றது.
  • இந்தியாவின் தனிநபர் உமிழ்வானது அமெரிக்கா, சீனா மற்றும் ஜி20 அமைப்பில் உள்ள நாடுகளின் உமிழ்வுகளை விடக் குறைவாக உள்ளது.
  • ஜி20 (19 நாடுகளைக் கொண்ட குழு மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்) அமைப்பானது 78% என்ற அளவில் அனைத்து உமிழ்வுகளுக்கும் காரணமாக உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்