TNPSC Thervupettagam

உமிழ்வு வர்த்தகத் திட்டம்

September 12 , 2023 311 days 209 0
  • நுண்துகள் மாசுபாட்டிற்கான உமிழ்வு வர்த்தகத் திட்டத்தினை (ETS) செயல்படுத்திய நாட்டின் இரண்டாவது நகரமாக அகமதாபாத் மாறியுள்ளது.
  • இது தொழில்துறை உமிழ்வைக் கட்டுப்படுத்தவும், மாநிலத்தின் மாசுபாட்டு அளவைக் குறைக்கவும் உதவும்.
  • 118 தொழில்துறைகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தில் செப்டம்பர் 01 ஆம் தேதி அன்று நேரடி வர்த்தகம் தொடங்கியது.
  • ஒரு உமிழ்வு வர்த்தக திட்டம் அல்லது “வரம்பு மற்றும் வர்த்தக” அமைப்பானது, ஒழுங்கு முறைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகளின் மீது அனுமதிக்கப்பட்ட மாசுபாட்டின் அளவிற்கான பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கச் செய்து, அந்த ஆலைகளுக்கான தர மதிப்பீடுகளை வழங்குகிறது.
  • உமிழ்வு வர்த்தகத் திட்டத்தின் கீழ், குறைந்த பட்ச சுற்றுச்சூழல் இழப்பு குறைப்பு செலவுகளைக் கொண்ட தொழில்துறைகள் உமிழ்வை அதிக அளவில் குறைத்து, அதிகப் படியான தர மதிப்பீடுகளை விற்பதன் மூலம் லாபம் ஈட்டலாம்.
  • அதிகளவில் குறைந்த பட்ச சுற்றுச்சூழல் இழப்பு குறைப்புச் செலவுகளைக் கொண்ட தொழில்துறைகள் விலையுயர்ந்த உபகரணங்களை நிறுவுவதற்குப் பதிலாக தர மதிப்பீடுகளை வாங்குவதன் மூலம் பணத்தைச் சேமிக்கலாம்.
  • இந்த திட்டம் ஆனது, முதன்முதலில் 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சூரத்தில் அமைந்த அதிக மாசுபடுத்தும் திட எரிபொருள் சார்ந்த 350 தொழிற்சாலைகளில் அறிமுகப் படுத்தப்பட்டது.
  • ETS போன்ற “வரம்பு மற்றும் வர்த்தக” அமைப்பு 1980 ஆம் ஆண்டுகளில் அமெரிக்க நாட்டினால் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • அது சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) போன்ற பல்வேறு மாசுபடுத்திகளின் உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்