இத்தனை ஆண்டுகளாக வளர்ச்சியடைந்த நாடுகள் (வரலாற்று ரீதியிலான) வெளியிட்ட கார்பன் டை ஆக்சைடு உமிழ்வினைப் பட்டியலிடுகின்ற, இந்தியப் பருவ நிலை நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட ஒரு வலைதளத்திற்கு இந்தியா அதிகாரப் பூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது.
வளர்ச்சியடைந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளின் உமிழ்வுகளில் உள்ள வேறுபாட்டினை எடுத்துரைக்கும் நோக்கத்துடன் இந்த உமிழ்வுப் பட்டியலானது தயாரிக்கப் பட்டது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகள் போன்றவை நிகர கார்பன் கடனைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிடப் படுகின்றன.
இந்தியா மற்றும் சீனா போன்ற வளர்ந்து வரும் நாடுகள் நிகர கடனைப் பெற்று உள்ளன.
எனவே வளர்ந்து வரும் நாடுகளைவிட உமிழ்வைக் கட்டுப்படுத்துவதற்கான உயரிய இலக்குகளுக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் உறுதியளிப்பதே நியாயமானது என்று இந்த தரவுத்தளம் குறிப்பிடுகிறது.
குறிப்பு
வருடாந்திர அடிப்படையில் கரியமில வாயு உமிழ்வில் இந்தியா 3வது பெரிய நாடாக உள்ளது.
இருப்பினும் அதன் வரலாற்று ரீதியிலான உமிழ்வின் அடிப்படையில் அது 6வது பெரிய உமிழ்வு நாடாகவே உள்ளது.
தனது மக்கள் தொகை அளவைக் கருத்தில் கொள்கையில் தனிநபர் உமிழ்வில் இது மிகக் குறைவான அளவையேக் கொண்டுள்ளது.